அய்யய்யோ..😰 என்னாச்சு? மேடையில் மயங்கி விழுந்த போலீஸ் கமிஷனர்! | thiruvananthapuram commissioner

Published at : 17 Dec 2025

அய்யய்யோ..😰 என்னாச்சு? மேடையில் மயங்கி விழுந்த போலீஸ் கமிஷனர்!

thiruvananthapuram police commissioner thomson jose collapsed in republic parade amid of governor sp

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆளுநர் பேசிக் கொண்டிருந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் திடீரென மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கேரளா அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது இந்த விழாவில் பங்கேற்ற கேரளா மாநில ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தாம்சன் ஜோஸ் திடீரென மயங்கி விழுந்தார் உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த சக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை அளித்த வேகத்திலேயே தாம்சன் ஜோஸ் விரைந்து மீண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தனது பணியை தொடர்ந்தார் ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு திரண்டு இருந்தவர்கள் அவரது பேச்சை கவனித்துக் கொண்டிருந்தபோது அவரது அருகில் நின்று கொண்டிருந்த காவல் அதிகாரி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது